Such (is the Pilgrimage): whoever honours the sacred rites of God, for him it is good in the Sight of his Lord. Lawful to you (for food in Pilgrimage) are cattle, except those mentioned to you (as exceptions): but shun the abomination of idols, and shun the word that is false,- AL-Qur'aan - 21:30

Friday, May 21, 2010

திருக்குர்ஆண் ஓர் வாழும் அற்புதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி.570-ல் பிறந்தார்கள். இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாராண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.
இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அவரது அறிவைக்கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டுகொள்ளும்.
நூறு வருடங்களுக்கு பின் என்ன நடக்கும், என்னென்ன கண்டுபிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்க்கு காரணம்.
பல அறிஞர்கள் கூட்டாக சேர்ந்து உருவாகிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்து பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதை காண முடியும்.அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.
ஆனால் எழுதவும்,படிக்கவும் தெரியாத,மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.
திருக்குர்ஆணை பொறுத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத்துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.
பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியில் மற்றும் வானியல் குறித்துப் பேசும் போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆண் பேசுகிறது.
அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உர்ப்பத்தியாகும் விதம் எனப் பல விஷயங்களை குர்ஆண் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. 21 ஆம் நூற்றாண்டின் ஓர் தேர்ந்த மருத்துவ மேதையை விட அழஅகாக பேசுகிறது.
தாவரங்களைப் பற்றி பேசினாலும், மலைகளைப் பற்றி பேசினாலும், நதிகளைப் பற்றி பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்கஆனின் பேச்சு இல்லை.
அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னாள் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்ப்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை திருக்கஆண் அன்றே சொல்லியிருக்கிறது.
பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆண் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திப்பவர்கள் "இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்" என்ற முடிவுக்குத்தான் வந்தாக வேண்டும்.
இன்றைய அறிவியலின் நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆண் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிக பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வர்.முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆண் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக்கொரும் அளவுக்கு குர்ஆண் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.
ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்ட மேதைகள் உருவாகிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டுக் கொண்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக குர்ஆண் இருக்கவே முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.
அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு எல்லாராலும் ஏற்கத்தக்க அற்ப்புதமான தீர்வுகளை குர்ஆண் கூறுவதும் இது முஹம்மது நபியின் சொந்த கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.
குளம்,கோத்திரம்,சாதி,இவற்றால் ஏற்ப்படும் தீண்டாமை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. இந்த சிக்கலான பிரச்சனைக்கும் திருக்குர்ஆண் மிக எளிதான தீர்வை வழங்கி தீண்டாமையை அடியோடு ஒலித்துக் கட்டியதை இதற்க்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளை திருக்கஆண் கூறுகிறது.அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளாம்.
முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக திருக்குர்ஆண் இருக்கவே முடியாது என்பதற்கு இவை யாவும் ஆதாரங்களாக உள்ளன.

நன்றி : உண்மை குரல்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails