பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஆக்டோபஸ் குறியும் கூத்தாட்டமும்? நவீன முட்டாள்கள்தனம்
2010ம் ஆண்டு ஜுன்-ஜுலை மாதங்களின் இடையே நடைபெற்ற உலக கால்பந்தாட்ட போட்டிகளில் பல்வேறு நாட்டு அணிகள் கலந்துக்கொண்டன இந்த போட்டிகளை உலகத்தில் பல கோடி மக்களும் கண்டு களித்தனர் ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டிகளை மையமாக வைத்து ஆன்லைன் சூதாட்டக்காரர்களும், குறி சொல்லும் சோதிடர்களும் தங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டனர் அவர்களின் வரிசையில் ஆக்டோபஸ் சோதிடம் மிகவும் பேசப்பட்டது உண்மையில் ஆக்டோபஸ் குறி சொல்லுமா? ஆக்டோபஸ்களை வைத்து குறி பார்க்கும் நவீன சோதிடக்காரர்களுக்கு இதோ சவுக்கடி!
ஆக்டோபஸ் என்றால் என்ன?
எட்டு கால்களும் அதன் நடுவில் வட்ட வடிவமான தலையை கொண்ட ஒருவகை நீர்வாழ் உயிரினத்திற்கு ஆக்டோபஸ் என்று பெயர். இந்த ஆக்டோபஸ் குறைந்தபட்சம் 2 அடி முதல் அதிகபட்சமாக 18 அடி நீளம் வரை வளரும். பொதுவாக நடுத்தர வகை ஆக்டோபஸ்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலும் பசுபிக் பெருங்கடலிலும் வாழ்கின்றன.
ஆக்டோபஸ் எவ்வாறு உணவு உட்கொள்கிறது?
இந்த ஆக்டோபஸ்-ன் ஒவ்வொரு காலிலும் ஊறிஞ்சு குழாய்கள் காணப்படுகின்றன மொத்தமாக ஒவ்வொரு ஆக்டோபஸின் உடலிலும் 240 ஊறிஞ்சும் குழாய்கள் ஆங்காங்கே பரவி காணப்படுகின்றன. இந்த உறிஞ்சு குழாய்கள் இறையை இலாவகமாக பிடித்து வாய்ப்பகுதிக்குள் தள்ளுவதற்கு பயன்படுகிறது.
ஆக்டோபஸ் எவ்வாறு இடம் பெயர்ந்து செல்கிறது?
ஆக்டோபஸ் என்ற உயிரினத்தின் 8 கால்களிலும் ஒருவகையான உறிஞ்சு குழாய்கள் இருப்பதை மேலே படித்தீர்கள் இந்த உறிஞ்சு குழாய்கள் உணவை கவ்வி பிடிப்பதற்கு மட்டுமல்லாது கடலுக்கு அடியில் காணப்படும் பெரிய பாறைகளை கவ்வி பிடித்து இலாவகமாக நகர்வதற்கும் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது கடலின் மணல் திட்டுக்களை உறிஞ்சு குழாய்கள் உதவியால் பிடித்துக்கொண்டு நகர்ந்தும் செல்கிறது.
ஆக்டோபஸ்-ன் தற்காப்பு கலை
ஆக்டோபஸ் என்ற உயிரினம் அதிபுத்திசாலி உயிரினங்களின் வரிசையில் இடம்பெறுகிறது அதற்கான காரணம் இது தன்னை பிற உயிரினங்களின் தற்காத்துக்கொள்ளும் விதத்தை வைத்து அறிந்துக கொள்ளலாம்.
இந்த ஆக்டோபஸ்கள் மணல் திட்டுக்களில் காணப்படும் சிறு பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியோ அல்லது மணல் குகைகளை அமைத்தோ அதற்குள் பதுங்கிக்கொண்டு எந்த விலங்கினமும் தன்னை நெருங்காத வண்ணம் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறது.
மேலும் இதன் வயிறுகளிலிருந்து ஒருவகையான கருமை நிறமுடைய திரவம் வெளிப்படுகிறது அது தன்னை தாக்க வரும் உயிரினத்தின் எதிரில் எச்சரிகை விடுத்து அந்த உயிரினத்தை தன்னிடமிருந்து விரட்டியடிக்க பயன்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி இந்த ஆக்டோபஸ் உயிரினங்கள் பச்சோந்திகளைப் போன்று அவ்வப்போது தங்கள் நிறங்களை மாற்றிக் கொள்கிறது. இந்த நிகழ்வு அந்த ஆக்டோபஸ்-ன் உள்ளுணர்வு மாற்றங்கள், சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்கிறது. மேலும் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இந்த ஆக்டோபஸ்கள் நாடினால் அருகிலுள்ள கடல் பாறைகளின் நிறத்தை சில நிமிடங்களில் தேர்ந்தேடுத்துக் கொண்டு எதிரியை திக்குமுக்காட வைத்துவிடுகிறதாம்.
ஆக்டோபஸும் அதன் இனப் பெருக்கமும்
ஆக்டோபஸ் என்ற உயிரினத்திலும் ஆண் பெண் என்ற இரண்டு வகை உண்டு இந்த இரண்டுமே தன் இனப்பெருக்கத்திற்கான உணர்வுகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆக்டோபஸும் பிறந்த 5வது மாதத்திலேயே இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடுகின்றன என்று ஆராய்ச்சியானர்கள் கூறுகின்றனர்.
ஆண் ஆக்டோபஸின் உடலில் உள்ள ஒரு கால் பகுதியில் SPERM எனப்படும் ஒருவகை விந்து அணுக்களுகளை பெற்றுள்ளன இதை SPERMATOPHORES என்று வல்லுநர்கள் அழைக்கின்றனர். இந்த விந்து அணுக்கள் பெண் ஆக்டோபஸின் MANTLE CAVITY என்ற பகுதிக்குள் செலுத்தப்பட்டு அதை சூளுரச் செய்கிறது. பெண் ஆக்டோபஸ் சூள் கொண்ட பின் 1/8 இஞ்ச் கொண்ட முட்டைகளை இடுகிறது. இந்த பெண் ஆக்டோபஸ்கள் சுமார் 100,000 முட்டைகளை இடும் திறன் கொண்டவைகளாக திகழ்கின்றன. இறுதியாக 4 முதல் 8 வாரங்கள் இந்த பெண் ஆக்டோபஸ் கோழிகளை போன்று அடைகாக்கின்றன பின்னர் ஆக்டோபஸ் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளிவரத்து துவங்குகின்றன.
ஆக்டோபஸ்களின் வாழ்நாள் எவ்வளவு?
இன்றைய நவீன உலகத்தில் உலா வரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆக்டோபஸ்களின் வாழக்கை முறையை உண்ணிப்பாக கவனித்த வந்தாலும் அதன் வாழ்நாளை பொருத்தவரை இன்னும் ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளனர் காரணம் அதுபற்றிய உண்மைகளை இன்னும் அவர்களால் முழுவதுமாக ஆராய முடியவில்லை.
இந்த ஆக்டோபஸ்கள் உத்தேசமாக பிறந்து ஒருவருடம் வாழ்ந்து மரணித்துவிடும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள் இதற்கு இவர்கள் முன்வைக்கும் வாதம் ஆக்டோபஸ்கள் பிறந்த 5 மாதத்தில் தங்கள் இனப்பெருக்க உணர்வுகளை எட்டுவதுதான். அதே சமயம் ஆக்டோபஸ்கள் விகாரணமான உடல் அமைப்பை கொண்டுள்ளதால் அதன் மரணம் அதன் உடலமைப்பை கொண்டு அமையலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.
ஆக்டோபஸ்- குறி கேட்பது பாவமான காரியமாகும்
ஆழ்கடல் நீரோட்டங்களில் அழகாக தன் ஜோடியுடன் சுந்திரமாக உலவிக்கொண்டு திரியும் ஆக்டோபஸ்களை பிடித்து அவைகளை கண்ணாடி நீர்த்தொட்டிகளில் வைத்து காட்சிப் பொருளாக பார்த்து ரசிப்பது அசிங்கமான செயலாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை பற்றி குரள் எழுப்பும் நாம் அழகான விலங்கினங்களையும் பறவை, நீர் வாழ் மற்றும் இன்ன பிற உயிரினங்களின் உரிமையையும் பரிக்க முற்படலாமா?
மேலும் கால்பந்தாட்டத்தில் இந்த அணி வெல்லுமா? அந்த அணி வெல்லுமா என்று என்று சோதிடம் பார்ப்பதற்காக இரண்டு தொட்டிகளில் ஆக்டோபஸ்களின் உணவை வைத்துவிட்டு அந்த கண்ணாடி தொட்டிகளுக்கு வெளியே இரண்டு அணிகளின் தேசிய கொடியை ஒட்டி ஆக்டோபஸ் எந்த தொட்டியின் உணவை சாப்பிடுகிறதோ அந்த அணி வெற்றி பெரும் என்று சோதிடம் கணிக்கிறார்களே இது கேவலமான காரியமாக தென்பட வில்லையா?
பகுத்தறிவை கொண்டுள்ள மனிதன் போயும் போயும் ஆக்டோபஸ்கள், கிளிகள், பறவைகளிடம் மற்றும் வாண்மண்டல கோள்கள் ஆகியவற்றிடம் குறி கேட்பது மனித இனத்திற்கே அசிங்கமான செயலாகும்! இந்த செயல் எவ்வாறு உள்ளதென்றால் அதற்கான உதாரணம் இதோ
துள்ளிக்குதிக்கும் மான்கள் நிறைந்த சோலையில் நான்கு சிங்கங்கள் அமர்ந்துக்கொண்டு இப்போது மான்களை வேட்டையாடினால் வெற்றி கிடைக்குமா? வெற்றி கிடைக்காதா? என்று பேசிக்கொள்ளுமாம் அதற்கு ஒரு முட்டாள் சிங்கம் அருகில் ஊர்ந்துக்கொண்டு செல்லும் நத்தையை பிடித்து மரக்கிளையில் வைக்குமாம் பிறகு அந்த முட்டாள் சிங்கம் கூறுமாம் நத்தை மரத்திலிருந்து கீழே விழுந்தால் நம்முடைய மான் வேட்டையில் வெற்றி கிடைக்கும் நத்தை மரத்திலிருந்து கீழே விழாமல் இருந்தால் நமக்கு தோல்வி நிச்சயம் என்று குறி கூறுமாம். இந்த முட்டாள் சிங்கத்தின் வார்த்தைக்கு மயங்கி மற்ற 3 சிங்கங்களும் மான் வேட்டைக்காக நத்தையை உற்று நோக்கிக்கொண்டே மான்களை தொலைத்துவிடுமாம்!
ஆக்டோபஸ்களை வைத்து குறி பார்க்கும் மடையர்களே!
கால்பந்தாட்டத்திற்காக ஆக்டோபஸ்களை நீங்கள் பயன் படுத்தினீர்கள் இதோ இந்தவகை குறி பார்க்கும் ஒரு சுவாரஸ்யமான போட்டியை நடத்த உங்களால் இயலுமா? இதோ அந்த போட்டி
இரண்டு அணிகளை தேர்ந்தேடுங்கள் ஒரு அணி வீரர்களிடம் பழைய ரக துப்பாக்கிகளை கொடுத்துவிடுங்கள் மற்றொரு அணி வீரர்களிடம் நவீன ரக துப்பாக்கிகளை கொடுத்து விடுங்கள் பிறகு இரண்டு நீர்த்தொட்டிகளில் ஆக்டோபஸ் உணவை வைத்துவிட்டு அந்த தொட்டிகளின் வெளியே இரு அணிகளின் சின்னங்களை ஒட்டிவிடுங்கள் இப்போது ஆக்டோபஸ் உயிரினத்தை அந்த தொட்டிக்கு அருகே வைத்துவிடுங்கள் அணி 1-ல் உள்ள தொட்டியின் உணவை ஆக்டோபஸ் சாப்பிட்டால் உங்களை அணி 1 பழைய ரக துப்பாக்கியால் சுடும் அல்லது அணி 2-ல் உள்ள தொட்டியின் உணவை ஆக்டோபஸ் உண்டுவிட்டால் உங்களை அந்த அணியினர் நவீன ரக துப்பாக்கியால் சுடுவார்கள்! ஆக்டோபஸ் உயிரினத்திடம் குறி கேட்கும் மடையர்களே இது உதாரணத்திற்காகத்தான் கூறப்பட்டது இதற்கும் துணிந்துவிடாதீர்கள்!
ஆக்டோபஸ் குறியின் மூலம் குறிப்பிட்ட அணிக்கு வெற்றி எவ்வாறு கிடைத்தது!
இதோ அடுக்கான காரணங்கள்!
- ஒவ்வொரு அணியின் சார்பாக விளையாடும் வீரர்கள் மனிதர்கள்தான்.
- ஒவ்வொரு மனிதனும் பலவீனமானவன் எளிதில் நம்பிவிடுவான்
- கால்பந்தாட்ட வீரர்கள் நிற்பது இலட்சம் பேர் கூடியுள்ள மைதானித்தில்
- கால்பந்தாட்ட வீரர்களின் குறிக்கோள் நன்றாக விளையாட வேண்டும் என்பதே
- தன் அணிக்காக கோள் அடிக்க தவறினால் தன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற பதற்றமும், அணியின் கோச் கேவலமாக திட்டுவார் என்ற பயமும் ஒவ்வொரு அணி வீரனிடமும் இருக்கும்!
- தன் ஆட்டத்திறன் எடுபடவில்லையென்றால் சொந்த நாட்டில் முகம் காட்ட இயலாது என்ற வெட்க உணர்வும் ஒவ்வொரு வீரனுக்கும் இருக்கும்!
- தனது அணி தோற்றுவிட்டால் பணத்தை வாங்கிக்கொண்டார்களோ என்ற அவதூறு பட்டம் கிடைத்துவிடுமே என்ற பயமும் ஒரு பக்கம் இருக்கும்!
- 30 வருடங்களாக எடுத்த கடுமையான பயிற்சி தோல்வியில் முடிந்தால் தன்னுடைய முயற்சிகள் வீனாகிவிடுமே என்ற பதற்றம் நெஞ்சை பிளக்கும்
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆக்டோபஸ்களை வைத்து குறி சொல்லி விளையாட விருக்கும் இரு அணியில் ஒரு அணி நிச்சயம் தோற்று போய்விடும் என்று கூறினால் அவ்வாறு அடையாளம் காட்டப்பட்ட விளையாட்டு வீரர்களால் எவ்வாறு ஜீரணிக்க இயலும் இது விளையாட்டு துரோகமில்லையா? இதனால் மேற்கூறப்பட்ட பதற்றம் இன்னும் அதிகமாக கூடி அந்த விளையாட்டு வீரர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு கோல் அடிக்கும் எண்ணம் வருமா? அல்லது நம் அணி ஆக்டோபஸ் குறி போல் தோற்றுவிடுமா என்ற பயம் வருமா?
இதோ சுய பரிசோதனை செய்து பாருங்கள்
காலையில் உங்கள் நண்பர்களோடு வாக்கிங் செல்வீர்கள் அப்போது யார் முதலில் வருவார் என்று போட்டி கூட வரும் அப்போது உங்கள் பின்னால் ஒருவன் நின்றுக்கொண்டு நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் தோற்றுவிடுவீர்கள் என்று கூறினால் உங்களுக்கு எரிச்சல் வருமா? ஓட்டத்தில் கவனம் வருமா? அல்லது உங்கள் கவனம் சிதறுமா?
இதோ இஸ்லாம் கூறும் அறிவுரைகளை கேளுங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரி (5754)
பசியால் சாகும் வரை ஒரு பூனையை அடைத்து வைத்திருந்த பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டு நரகத்தினுள் நுழைந்தாள், நீ அந்த பூனையை அடைத்து வைத்திருந்த போது தண்ணீர் புகட்டவுமில்லை, உணவு கொடுக்கவுமில்லை, இன்னும் அதை விட்டுவிடவுமில்லை, (அப்படி அதை அவிழ்த்து) விட்டடிருந்தால் அது பூமியிலுள்ள புழுப்பூச்சிக்களை உண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
முஃமின்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்வீர்களானால், உங்களுக்கு (நன்மை-தீமையைப்) பகுத்தறியும் தன்மையை அவன் அளித்து, உங்களுடைய தீமைகளை உங்களை விட்டும் அகற்றி, இன்னும் உங்க(ளுடைய பாவங்க)ளை மன்னிப்பான் (ஏனெனில்) அல்லாஹ் மகத்தான கருணை உடையவன். (குர்ஆன் 8:29)
அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டீனால் அவனால் அதைப் பார்க்க முடியாது எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. (அல்குர்ஆன் 24:40)
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
அல்ஹம்துலில்லாஹ்
Source : Islamic Paradise